சினிமா
தொடர்கள்

அநீதி - சினிமா விமர்சனம்

முதலாளித்துவத்தின் இரக்கமற்ற நிலையையும் பணக்கார வர்க்கத்தின் கொடூர மனநிலையையும் பதிவு செய்ய முயன்று சில காட்சிகளில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் வசந்தபாலன்.

Published:Updated:
அர்ஜுன்தாஸ் - துஷாரா விஜயன்
பிரீமியம் ஸ்டோரி
அர்ஜுன்தாஸ் - துஷாரா விஜயன்
5Comments
Share

வசதிபடைத்தவர்களால் எளிய மனிதர்களுக்கு இழைக்கப்படும் ‘அநீதி'யைச் சொல்லும் படம்.

சென்னையில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் டெலிவரி பாயாக இருக்கும் திருமேனிக்கு (அர்ஜுன்தாஸ்)மற்றவர்களைக் கொலை செய்யும் உந்துதல் உள்ள மனநோய். ஒரு வீட்டுக்கு உணவு டெலிவரி செய்யும்போது சுபாவுடன் (துஷாரா விஜயன்) மலரும் காதலால் அந்த மனநோயின் தீவிரம் குறைகிறது. பணக்கார வீட்டுப் பணிப் பெண்ணான துஷாராவுக்கு ஏற்படும் சிக்கல்கள் எப்படி திருமேனியைக் கொலைகாரராக மாற்றுகிறது என்பதைச் சொல்கிறது படம்.