ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைக்கப்பட்ட பணிமனைக்கு மாறியது கிழக்கு-மேற்கு ரயில் பாதை செயல்பாடுகள்

whatsapp
facebook
x
copylink

ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைக்கப்பட்ட பணிமனைக்கு மாறியது கிழக்கு-மேற்கு ரயில் பாதை செயல்பாடுகள்

2 mins read
whatsapp
facebook
x
copylink
sound-waves
செய்திகளை கேளுங்கள், AI மூலம்
உருவாக்கப்பட்ட எங்கள்
செய்தியாளர்களின் குரலில்
down
Generated by AI
7688d35f-d58f-4681-8e13-b8d4ec8d2c70
ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைக்கப்பட்ட பணிமனையில் ரயிலின் அடிப்பகுதியை ஆய்வு செய்ய உயர்த்தப்பட்ட ஆறு பரிசோதனை தண்டவாளங்கள் உள்ளன - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கிழக்கு-மேற்கு ரயில் பாதை டிசம்பர் 2025ஆம் ஆண்டில் புதிய ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைக்கப்பட்ட பணிமனையுடன் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் செயல்பாடுகள் அங்கிருந்து தொடங்கப்பட்டுள்ளன.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை மற்றும் டௌன்டவுன் பாதை ரயில்கள் 2026 இறுதிக்குள் இந்த ஒருங்கிணைக்கப்பட்ட பணிமனையிலிருந்து இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 10) நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

தற்போது, டௌன்டவுன் பாதை ரயில்கள் உட்லண்ட்சில் உள்ள கலி பத்து பணிமனையையும், தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை ரயில்கள் மண்டாய் பணிமனையையும் பயன்படுத்துகின்றன.

பல அடுக்குகளைக் கொண்ட இந்த ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைக்கப்பட்ட பணிமனை, 220 ரயில்கள் வரை நிறுத்திவைக்கும் வசதி கொண்டது. மூன்று வெவ்வேறு ரயில் பாதைகளுக்கான பணிமனைகள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளன.

டௌன்டவுன் பாதை ரயில்களுக்கான பணிமனை நிலத்துக்கு அடியில் உள்ள தளத்தில் உள்ளது.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை ரயில்களுக்கான பணிமனை தரைத்தளத்தில் உள்ளது.

கிழக்கு-மேற்குப் பாதை ரயில்களுக்கான பணிமனை நிலத்துக்கு மேல் உள்ள தளத்தில் அமைந்துள்ளது.

இவை பொதுவான வசதிகள் மற்றும் அமைப்புகளைப் பகிர்ந்துகொண்டாலும், மூன்று பணிமனைகளும் தனித்தனியாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. டௌன்டவுன் பாதையை எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் இயக்குகிறது.

ஒரே இடத்தில் மூன்று பணிமனைகளை அமைப்பதன் மூலம் 44 ஹெக்டர் நிலம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இது தோராயமாக 60 காற்பந்துத் திடல்களின் பரப்பளவுக்குச் சமமாகும்.

ஊழியர்கள், புதிய பணிமனையில் வேலை செய்வது பலவிதங்களில் எளிதாக இருப்பதாகக் கிழக்கு-மேற்கு மற்றும் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதைகளை இயக்கும் எஸ்எம்ஆர்டியின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் சாங்கி பணிமனையில், ரயில் ஓட்டுநர்கள் தண்டவாளங்களை அடைய திறந்தவெளியில் ‘பகி’ வாகனத்தில் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் புதிய பணிமனையில், அலுவலகத்திலிருந்து தண்டவாளங்களுக்குச் செல்ல கூரையிடப்பட்ட நடைபாதை வசதி உள்ளது.

சாங்கி பணிமனையில் தண்டவாள அமைப்பு காரணமாக ஒரு ரயிலை நிறுத்தி வைப்பதற்கு ஏறத்தாழ 20 நிமிடங்கள் ஆகும். ஆனால் புதிய பணிமனையில் ரயில்கள் நேரடியாக நிறுத்துமிடத்திற்குச் செல்ல முடிவதால், அதே வேலை இப்போது 10 நிமிடங்களுக்குள்ளேயே முடிந்துவிடுகிறது.

புதிய பணிமனையில் ரயில்களை நிறுத்தி வைக்கும் மற்றும் பராமரிக்கும் திறன் பல மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைக்கப்பட்ட பணிமனையில் 38 தண்டவாளங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் இரண்டு ரயில்கள் என மொத்தம் 76 ரயில்களை நிறுத்தலாம். இது சாங்கி பணிமனையில் இருந்த 36 ரயில்கள் என்ற கொள்ளளவைவிட இரண்டு மடங்கிற்கும் அதிகம்.

ரயிலின் அடிப்பகுதியை ஆய்வு செய்ய புதிய பணிமனையில் உயர்த்தப்பட்ட ஆறு பரிசோதனை தண்டவாளங்கள் உள்ளன. சாங்கி பணிமனையில் நான்கு மட்டுமே இருந்தன.

ரயில்களைப் பராமரித்த பிறகு அவற்றைச் சோதிக்கத் தனியாக ஒரு சோதனைத் தண்டவாளம் உள்ளது. சாங்கி பணிமனையில் இந்த வசதி இல்லாததால், பொறியாளர்கள் ரயில்களைச் சோதிக்க நள்ளிரவு வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

whatsapp
facebook
x
copylink
என்ன நினைக்கிறீர்கள்?
குறிப்புச் சொற்கள்

லாரி - இழுவை வண்டி மோதல்; மருத்துவமனையில் பத்துப் பேர்

whatsapp
facebook
x
copylink

லாரி - இழுவை வண்டி மோதல்; மருத்துவமனையில் பத்துப் பேர்

1 mins read
whatsapp
facebook
x
copylink
3b315b3d-c5e4-4264-9026-20d71109ad6c
முன்னால் சென்ற இழுவை வண்டிமீது லாரி மோதியது. - படம்: ஃபேஸ்புக் / எஸ்ஜி ரோடு விஜிலான்டே

கிராஞ்சி விரைவுச்சாலையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) மாலை உச்ச நேரத்தின்போது லாரியும் இழுவை வண்டியும் மோதிக்கொண்ட விபத்து நேர்ந்தது.

அதனைத் தொடர்ந்து பத்துப் பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

துவாசை நோக்கிச் செல்லும் கிராஞ்சி விரைவுச்சாலையில், சுவா சூ காங் டிரைவ் வெளிவழிக்குச் சற்று முன்பாக, மாலை 6 மணியளவில் அவ்விபத்து நேர்ந்தது என்று காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

ஏழு பேர் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கும் மூவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் அப்போது அவர்கள் அனைவரும் சுயநினைவுடன் இருந்தனர் என்றும் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

அந்தப் பத்துப் பேரில் ஒன்பது பேர் லாரிப் பயணிகள். அவர்கள் 30 முதல் 48 வயதிற்குட்பட்டவர்கள். மற்றொருவர் 39 வயது லாரி ஓட்டுநர்.

விபத்து குறித்த காணொளி எஸ்ஜி ரோடு விஜிலான்டே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதில், ஆள்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று விரைவுச்சாலையின் ஓரத் தடத்தில் செல்வதைக் காண முடிகிறது. அந்த லாரிக்கு முன்பாகச் சென்றுகொண்டிருந்த இழுவை வண்டி மெதுவாகச் சென்று நிற்பது தெரிகிறது.

சில நொடிகளில், அந்த லாரி, இழுவை வண்டியின் பின்புறத்தில் பலமாக மோதியது. மோதிய வேகத்தில், லாரியின் பின்புறம் மேல்நோக்கித் தூக்கப்படுவதையும் அதன் பின்னால் அமர்ந்திருந்த பலரும் முன்னோக்கிச் சரிவதையும் காண முடிந்தது.

விபத்து குறித்துக் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

whatsapp
facebook
x
copylink
என்ன நினைக்கிறீர்கள்?
குறிப்புச் சொற்கள்

சிங்கப்பூர்-துபாய் இடையே மேலும் பல சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து

whatsapp
facebook
x
copylink

சிங்கப்பூர்-துபாய் இடையே மேலும் பல சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து

2 mins read
whatsapp
facebook
x
copylink
a904ea32-c344-4a3b-b8bb-2a35a2a2e91d
எஸ்கியூ494 (சிங்கப்பூரிலிருந்து துபாய்), எஸ்கியூ495 (துபாயிலிருந்து சிங்கப்பூர்) என்ற இரு விமானச் சேவைகளும் மார்ச் 28 வரை ரத்து செய்யப்படுவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. - கோப்புப்படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றமான சூழலால் மார்ச் 28ஆம் தேதிவரை சிங்கப்பூருக்கும் துபாய்க்கும் இடையிலான மேலும் பல விமானச் சேவைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) ரத்து செய்துள்ளது.

இது குறித்து புதன்கிழமை (மார்ச் 11) தனது இணையத்தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், மத்திய கிழக்கில் நிலவிவரும் புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக எஸ்கியூ494 (சிங்கப்பூரிலிருந்து துபாய்), எஸ்கியூ495 (துபாயிலிருந்து சிங்கப்பூர்) என்ற இரு விமானச் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர்ந்து, பிப்ரவரி 28 முதல் மார்ச் 7 வரை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்கூட் நிறுவனங்களின் மொத்தம் 26 விமானச் சேவைகள் ரத்துசெய்யப்படுவதாக மார்ச் 1ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, மார்ச் 5ஆம் தேதியிட்ட ஃபேஸ்புக் பதிவில், எஸ்கியூ494 மற்றும் எஸ்கியூ495 சேவைகள் மார்ச் 15 வரை நிறுத்திவைக்கப்படுவதாக எஸ்ஐஏ அறிவித்தது.

மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக, சிங்கப்பூர்-துபாய் இடையிலான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானச் சேவைகள் மார்ச் 28 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக, சிங்கப்பூர்-துபாய் இடையிலான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானச் சேவைகள் மார்ச் 28 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. - படம்: ஏஎஃப்பி

மார்ச் 17 வரை ‘ஸ்கூட் ஜெட்டா’ விமானச் சேவைகள் ரத்து

இந்நிலையில், புதன்கிழமை வெளியான அறிவிப்பில், “விமானச் சேவை ரத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மாற்று விமானங்களில் பயண ஏற்பாடு செய்து தரப்படும் அல்லது பயன்படுத்தப்படாத பயணச்சீட்டுகளுக்கான முழுத் தொகையையும் அவர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மத்திய கிழக்கு மோதலால் சிங்கப்பூருக்கும் ஜெட்டாவிற்கும் இடையிலான தனது விமானச் சேவைகளையும் ஸ்கூட் நிறுவனம் மார்ச் 17ஆம் தேதிவரை ரத்து செய்துள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்சின் மலிவுக் கட்டண விமானச் சேவை நிறுவனமான ஸ்கூட், டிஆர்596 (சிங்கப்பூரிலிருந்து ஜெட்டா) மற்றும் டிஆர்597 (ஜெட்டாவிலிருந்து சிங்கப்பூர்) என்ற விமானச் சேவைகள் ரத்து செய்யப்படுவதாகச் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது.

whatsapp
facebook
x
copylink
என்ன நினைக்கிறீர்கள்?
குறிப்புச் சொற்கள்