குறுக்குத் தீவு ரயில் பாதை: இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கின

whatsapp
facebook
x
copylink

குறுக்குத் தீவு ரயில் பாதை: இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கின

2 mins read
whatsapp
facebook
x
copylink
fa743edb-2e67-4c39-b26c-04a774079353
குறுக்குத் தீவு ரயில் பாதைக்கான இரண்டாம் கட்ட பணிகளுக்காக கிளமெண்டியில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் கலந்துகொண்டு பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குறுக்குத் தீவு ரயில் பாதைக்கான இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கிவிட்டன. ஆறு புதிய எம்ஆர்டி நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்கான சுரங்கப் பணிகள் மே மாதம் தொடங்கின.

டர்ஃப் சிட்டியிலிருந்து ஜூரோங் ஏரி வட்டாரம் வரை நிலத்துக்கு அடியில் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன.

சிங்கப்பூரில் நிலத்துக்கு அடியில் ஆக ஆழமான கிங் ஆல்பர்ட் பார்க் எம்ஆர்டி நிலையத்தைக் கட்டும் பணிகளும் இதில் அடங்கும்.

இந்த நிலையம் நிலத்துக்கு அடியில் 50 மீட்டர் ஆழத்தில் உள்ளது. இது 16 மாடிக் கட்டடத்தின் உயரத்துக்குச் சமம்.

இதற்கு முன்பு பென்கூலன் எம்ஆர்டி நிலையம்தான் நிலத்துக்கு அடியில் ஆக அழமான நிலையமாக இருந்தது.

மூன்றாம் கட்ட பணிகளுக்கான பொறியியல் ஆய்வுகள் கிட்டத்தட்ட நிறைவடைய இருப்பதாக தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் திங்கட்கிழமை (ஜூலை 7) தெரிவித்தார்.

ஜூரோங் தொழிற்பேட்டைக்குச் சேவையாற்றும் வருங்கால எம்ஆர்டி நிலையங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் இவ்வாண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரின் எட்டாவது எம்ஆர்டி ரயில் பாதையான குறுக்குத் தீவு ரயில் பாதை, ரயில் கட்டமைப்பின் மீள்திறனை பேரளவில் மேம்படுத்தும் என்று திரு சியாவ் கூறினார்.

குறுக்குத் தீவு ரயில் பாதைக்கான இரண்டாம் கட்ட பணிகளுக்காக கிளமெண்டியில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் அவர் கலந்துகொண்டு பேசினார்.

வட்ட ரயில் பாதையைத் தவிர்த்து தற்போது செயல்பாட்டில் உள்ள உள்ள அனைத்து ரயில் பாதைகளுடன் குறுக்குத் தீவு ரயில் பாதை இணைக்கப்படும்.

குறுக்குத் தீவு ரயில் பாதையில் அறிவிக்கப்பட்ட 21 நிலையங்களில் எட்டு நிலையங்கள் ரயில் சந்திப்புகளாகச் செயல்படும்.

50 கிலோமீட்டர் நீளமுள்ள குறுக்குத் தீவு ரயில் பாதை சிங்கப்பூரின் ஆக நீண்ட நிலத்தடி எம்ஆர்டி ரயில் பாதையாகத் திகழும்.

முதல் கட்ட பணியில் 12 நிலையங்கள் அடங்கும். இவை 2030ஆம் ஆண்டில் திறக்கப்படும்.

பாசிர் ரிஸ் வட்டாரத்தில் பொங்கோலுக்கான நான்கு நிலையங்களைக் கொண்ட ரயில் பாதை நீட்டிப்பு 2032ஆம் ஆண்டில் இயங்கத் தொடங்கும்.

whatsapp
facebook
x
copylink
குறிப்புச் சொற்கள்

அபுதாபியிலும் துபாயிலும் உள்ள சிங்கப்பூரர்கள் ஓமானுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்

whatsapp
facebook
x
copylink

அபுதாபியிலும் துபாயிலும் உள்ள சிங்கப்பூரர்கள் ஓமானுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்

1 mins read
whatsapp
facebook
x
copylink
2b01e166-062b-478b-aa67-d329471f1323
அபுதாபியிலும் துபாயிலும் உள்ள சிங்கப்பூரர்கள் இரண்டு குழுக்களாக ஓமானின் மஸ்கட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். - படம்: ஃபேஸ்புக்/அபுதாபியிலுள்ள சிங்கப்பூர்த் தூதரகம்

அபுதாபியில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகமும் துபாயில் உள்ள சிங்கப்பூர்த் துணைத் தூதரகமும் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) காலையில் அபுதாபியிலும் துபாயிலும் உள்ள சிங்கப்பூரர்களை இரண்டு குழுக்களாக ஓமானின் மஸ்கட்டுக்கு அனுப்பியுள்ளன.

அவர்கள் சனிக்கிழமை (மார்ச் 7) மஸ்கட்டிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் செல்வார்கள். பயணத்தின் முதற்கட்டமாக, சிங்கப்பூர்த் தூதரக, துணைத் தூதரக அதிகாரிகள் அவர்களுடன் பேருந்தில் செல்வார்கள்.

மஸ்கட்டில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகமும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் நெருக்கடிநிலைச் சமாளிப்புக் குழுவும் ஓமானில் அவர்களுக்கு ஆதரவு வழங்கும்.

புறப்படுவதற்கு முன்னர், சிங்கப்பூரர்களிடம் தூதர் கமல் ஆர் வாஸ்வானியும் துணைத் தூதர் ரஸிஃப் அல்ஜுனிட்டும் பேசினார்கள். விமானச் சேவைகள் ரத்தானதால், பலருக்குச் சவால்மிகுந்த வாரமாக அமைந்தது.

இப்போது அவர்கள் வீடு திரும்ப முடியும் என்பதால் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாகவும் பயணிகளுக்கு அது பாதுகாப்பான, சுமுகமான பயணமாக அமையவேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும் அவர்கள் கூறினர்.

whatsapp
facebook
x
copylink
என்ன நினைக்கிறீர்கள்?
குறிப்புச் சொற்கள்

மத்திய கிழக்குச் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க இடையூறு இல்லை: சேட்ஸ்

whatsapp
facebook
x
copylink

மத்திய கிழக்குச் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க இடையூறு இல்லை: சேட்ஸ்

1 mins read
whatsapp
facebook
x
copylink
63dc680a-bb79-4a1a-a38c-1b66caef0e8d
ஈரானுக்கு எதிராக அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடரும் நிலையில், சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் புகை கிளம்புவதைப் பார்க்கமுடிகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

சில வளைகுடா நாடுகளில் எதிர்பாராவிதமாக மூடப்பட்டுள்ள வான்வழிகள் காரணமாக, உலகளாவிய ஆகாயச் சரக்கு விநியோகத் தொடர் பாதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தனது மத்திய கிழக்குச் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க இடையூறுகள் இல்லை என்று விமானச் சரக்குகளைக் கையாளும் ‘சேட்ஸ்’ நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானுக்கு எதிராக அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து, சவூதி அரேபியாவிலும் ஓமானிலும் உள்ள ‘சேட்ஸ்’ மத்திய கிழக்கு நிலையங்களில் செயல்பாடுகள் தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளின்கீழ் தொடர்வதாக வெள்ளிக்கிழமை (மார்ச் 6) வெளியிடப்பட்ட அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.

அந்த வட்டாரத்தில் உள்ள அதன் ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக ‘சேட்ஸ்’ கூறியது. அங்குப் பணிபுரியும் சிங்கப்பூரர்களும் அவர்களில் அடங்குவர்.

மத்திய கிழக்குப் போரை அணுக்கமாகக் கண்காணிப்பதாக ‘சேட்ஸ்’ கூறியது. சில வளைகுடா நாடுகளில் வான்வழிகள் மூடப்பட்டிருப்பது குறித்து அது ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

விமான நிறுவன வாடிக்கையாளர்களுடன் அணுக்கமான தொடர்பில் இருப்பதாகவும் அது கூறியது. வர்த்தகத் தடங்களின் மாற்றங்களுக்கு ஏற்ப தனது செயல்பாடுகள் தொடர்ந்து மாற்றியமைக்கப்படும் என்று ‘சேட்ஸ்’ தெரிவித்தது.

வான்வழிகள் மூடப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் நாடுகளுக்கு, சவூதி அரேபியாவிலும் ஓமானிலும் உள்ள அதன் வசதிகள் மாற்று வழிகளாக அமையக்கூடும் என்று ‘சேட்ஸ்’ கூறியது.

whatsapp
facebook
x
copylink
என்ன நினைக்கிறீர்கள்?
குறிப்புச் சொற்கள்