குறுக்குத் தீவு ரயில் பாதையின் பொங்கோல் நீட்டிப்புக் கட்டுமானப் பணி தொடங்கியது

whatsapp
facebook
x
copylink

குறுக்குத் தீவு ரயில் பாதையின் பொங்கோல் நீட்டிப்புக் கட்டுமானப் பணி தொடங்கியது

2 mins read
whatsapp
facebook
x
copylink
674898bd-00b0-4d80-b9a0-412589f77bc8
ரிவியேரா எம்ஆர்டி நிலையம் அமையவிருக்கும் இடத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த நில அகழ்வு நிகழ்வில் இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் கலந்துகொண்டார். மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் உடன் உள்ளார். - படம்: எஸ்பிஎச் மீடியா

குறுக்குத் தீவு ரயில் பாதையின் பொங்கோல் நீட்டிப்புத் திட்டத்தின் கட்டுமானம் அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூரின் வடகிழக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு இடையே அன்றாடம் 70,000க்கும் அதிகமான பயணங்களின் தூரம் குறையும்.

2032க்குள் பயணிகள் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், சிங்கப்பூரின் எட்டாவது ரயில் பாதையான குறுக்குத் தீவு பாதைக்கு 7.3 கி.மீ. நீட்டிப்பு நான்கு நிலையங்களை உள்ளடக்கும். பொங்கோல், ரிவியேரா, இலாயஸ், பாசிர் ரிஸ் ஆகியவை அவை.

பொங்கோல் நிலையம், வடக்கு-கிழக்கு ரயில் பாதையுடன் இணைக்கப்படும். ரிவியேரா நிலையம், பொங்கோல் எல்ஆர்டி பாதையுடன் இணைக்கப்படும். பாசிர் ரிஸ் நிலையம், கிழக்கு-மேற்கு ரயில் பாதையுடன் இணைக்கப்படும்.

ரிவியேரா எம்ஆர்டி நிலையம் அமையவிருக்கும் இடத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த நில அகழ்வு விழாவில் கலந்துகொண்டு பேசிய இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், நீட்டிக்கப்படும் பாதை திறக்கப்பட்டவுடன் குடியிருப்பாளர்கள் பொங்கோலில் இருந்து பாசிர் ரிசுக்கு 15 நிமிடங்களில் சென்றுவிடலாம் என்று கூறினார். தற்போது அவ்விரு இடங்களுக்கும் இடையே பேருந்துப் பயண நேரம் 40 நிமிடங்களாக உள்ளது.

ரயில் பாதை நீட்டிக்கப்படுவதன் மூலம் 40,000க்கும் அதிகமான குடும்பங்கள் பலனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கோல் மின்னிலக்க வட்டாரம், சாங்கி ஏவியேஷன் பார்க் போன்ற இடங்களுக்கு ரயில் வசதிகளையும் இது மேம்படுத்தும்.

குறுக்குத் தீவு ரயில் பாதையின் பொங்கோல் நீட்டிப்பு, அதே பாதையில் உள்ள பாசிர் ரிஸ் நிலையத்துடன் இணைக்கப்படும்.

குறுக்குத் தீவு பாதையின் முதற்கட்ட கட்டுமானப் பணி ஜனவரியில் தொடங்கியது. ஏவியேஷன் பார்க் முதல் பிரைட் ஹில் வரை 12 நிலையங்கள் அப்பாதையில் அமைகின்றன.

அப்பாதையின் இரண்டாம் கட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கட்டங்கட்டமாகக் கோரப்படுகிறது. டர்ஃப் சிட்டி முதல் ஜூரோங் லேக் வட்டாரம் வரை ஆறு நிலையங்கள் அதில் இடம்பெறுகின்றன. குறுக்குத் தீவு பாதையின் மூன்றாம் கட்டத்துக்கான பொறியியல் ஆய்வு நடைபெற்று வருகிறது.

whatsapp
facebook
x
copylink
குறிப்புச் சொற்கள்

அபுதாபியிலும் துபாயிலும் உள்ள சிங்கப்பூரர்கள் ஓமானுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்

whatsapp
facebook
x
copylink

அபுதாபியிலும் துபாயிலும் உள்ள சிங்கப்பூரர்கள் ஓமானுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்

1 mins read
whatsapp
facebook
x
copylink
2b01e166-062b-478b-aa67-d329471f1323
அபுதாபியிலும் துபாயிலும் உள்ள சிங்கப்பூரர்கள் இரண்டு குழுக்களாக ஓமானின் மஸ்கட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். - படம்: ஃபேஸ்புக்/அபுதாபியிலுள்ள சிங்கப்பூர்த் தூதரகம்

அபுதாபியில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகமும் துபாயில் உள்ள சிங்கப்பூர்த் துணைத் தூதரகமும் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) காலையில் அபுதாபியிலும் துபாயிலும் உள்ள சிங்கப்பூரர்களை இரண்டு குழுக்களாக ஓமானின் மஸ்கட்டுக்கு அனுப்பியுள்ளன.

அவர்கள் சனிக்கிழமை (மார்ச் 7) மஸ்கட்டிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் செல்வார்கள். பயணத்தின் முதற்கட்டமாக, சிங்கப்பூர்த் தூதரக, துணைத் தூதரக அதிகாரிகள் அவர்களுடன் பேருந்தில் செல்வார்கள்.

மஸ்கட்டில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகமும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் நெருக்கடிநிலைச் சமாளிப்புக் குழுவும் ஓமானில் அவர்களுக்கு ஆதரவு வழங்கும்.

புறப்படுவதற்கு முன்னர், சிங்கப்பூரர்களிடம் தூதர் கமல் ஆர் வாஸ்வானியும் துணைத் தூதர் ரஸிஃப் அல்ஜுனிட்டும் பேசினார்கள். விமானச் சேவைகள் ரத்தானதால், பலருக்குச் சவால்மிகுந்த வாரமாக அமைந்தது.

இப்போது அவர்கள் வீடு திரும்ப முடியும் என்பதால் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாகவும் பயணிகளுக்கு அது பாதுகாப்பான, சுமுகமான பயணமாக அமையவேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும் அவர்கள் கூறினர்.

whatsapp
facebook
x
copylink
என்ன நினைக்கிறீர்கள்?
குறிப்புச் சொற்கள்

மத்திய கிழக்குச் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க இடையூறு இல்லை: சேட்ஸ்

whatsapp
facebook
x
copylink

மத்திய கிழக்குச் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க இடையூறு இல்லை: சேட்ஸ்

1 mins read
whatsapp
facebook
x
copylink
63dc680a-bb79-4a1a-a38c-1b66caef0e8d
ஈரானுக்கு எதிராக அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடரும் நிலையில், சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் புகை கிளம்புவதைப் பார்க்கமுடிகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

சில வளைகுடா நாடுகளில் எதிர்பாராவிதமாக மூடப்பட்டுள்ள வான்வழிகள் காரணமாக, உலகளாவிய ஆகாயச் சரக்கு விநியோகத் தொடர் பாதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தனது மத்திய கிழக்குச் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க இடையூறுகள் இல்லை என்று விமானச் சரக்குகளைக் கையாளும் ‘சேட்ஸ்’ நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானுக்கு எதிராக அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து, சவூதி அரேபியாவிலும் ஓமானிலும் உள்ள ‘சேட்ஸ்’ மத்திய கிழக்கு நிலையங்களில் செயல்பாடுகள் தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளின்கீழ் தொடர்வதாக வெள்ளிக்கிழமை (மார்ச் 6) வெளியிடப்பட்ட அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.

அந்த வட்டாரத்தில் உள்ள அதன் ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக ‘சேட்ஸ்’ கூறியது. அங்குப் பணிபுரியும் சிங்கப்பூரர்களும் அவர்களில் அடங்குவர்.

மத்திய கிழக்குப் போரை அணுக்கமாகக் கண்காணிப்பதாக ‘சேட்ஸ்’ கூறியது. சில வளைகுடா நாடுகளில் வான்வழிகள் மூடப்பட்டிருப்பது குறித்து அது ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

விமான நிறுவன வாடிக்கையாளர்களுடன் அணுக்கமான தொடர்பில் இருப்பதாகவும் அது கூறியது. வர்த்தகத் தடங்களின் மாற்றங்களுக்கு ஏற்ப தனது செயல்பாடுகள் தொடர்ந்து மாற்றியமைக்கப்படும் என்று ‘சேட்ஸ்’ தெரிவித்தது.

வான்வழிகள் மூடப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் நாடுகளுக்கு, சவூதி அரேபியாவிலும் ஓமானிலும் உள்ள அதன் வசதிகள் மாற்று வழிகளாக அமையக்கூடும் என்று ‘சேட்ஸ்’ கூறியது.

whatsapp
facebook
x
copylink
என்ன நினைக்கிறீர்கள்?
குறிப்புச் சொற்கள்