Vikatan
அலசல்
அரசியல்

“ரூ.6,000 கோடி வரி இழப்பு!” - கனிமக் கொள்ளையர்களை காக்கும் அரசு?

ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும் அளவுக்குக் கனிம வளக் கொள்ளை நடப்பதாகச் சொல்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். லட்சக்கணக்கான கன மீட்டர்கள் வெட்டிக் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
 முதல்வருடன் ஜெயகாந்தன்...
பிரீமியம் ஸ்டோரி
முதல்வருடன் ஜெயகாந்தன்...
45Comments
Share

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குவாரி விபத்தும், பட்டாசு ஆலை விபத்தும் நடப்பது தமிழகத்தில் தொடர்கதையாகிவிட்டது. சமீபத்தில்கூட சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ஒரு தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில், ஆறு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அசம்பாவிதம் ஏற்பட்டவுடன், `நிவாரண நிதி’ என்கிற பெயரில் ஊர் வாயை அடைப்பதில் வேகம் காட்டும் அரசாங்கம், இந்தப் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் முனைப்பு காட்டுவதே இல்லை. இந்தச் சூழலில்தான், சமீபத்தில் வெளியான சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பு, அரசுக்குச் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது!

“திருப்பூர் மாவட்டத்தில் நடந்த கனிம வளக் கொள்ளைக்கு எதிராகத் தொடரப்பட்ட ஒரு வழக்கில், தமிழகத்தில் நடந்துவரும் கனிம வளக் கொள்ளையை மொத்தமாகவே வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது நீதிமன்றம். அபராதங்கள் விதிக்கப்பட்ட முறையில் பல தகிடுதத்தங்கள் நிகழ்ந்திருப்பது வெளிச்சமாகியிருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பின்படி அபராதங்களை வசூலிப்பதில் கவனம் செலுத்தினால், அரசுக்கு வரவேண்டிய சுமார் 6,000 கோடி ரூபாய் வரி வருவாயை வசூலித்துவிடலாம். தவிர, இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும் தண்டனை பெற்றுத்தர முடியும்” என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

என்ன விவகாரம்... உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது... விசாரித்தோம்.