Vikatan
மற்றவை

எடப்பாடி பழனிசாமி உருவாக்கும் `மெகா கூட்டணி'யில் இடம்பெறுகிறாரா விஜய்?

அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், ‘மெகா கூட்டணியை உருவாக்குவேன்’ என்று சொல்லிவருகிறார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அந்த மெகா கூட்டணியில் த.வெ.க இடம்பெறப்போகிறது என்ற ஒரு தரப்பு சொல்லிவருகிறது. அதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி, விஜய்
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி, விஜய்
4Comments
Share
அ.தி.மு.க – த.வெ.க இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று, அது ஒரு முடிவுக்கு வராத சூழலில், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி உறுதியானது. மத்திய உள்துறை அமைச்சர் சென்னைக்கு வந்து தங்கியிருந்து அந்த வேலையைச் செய்துமுடித்தார். அதன் பிறகு, அ.தி.மு.க-வின் செயற்குழு கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில், ‘மெகா கூட்டணி அமைப்பதற்கு வியூகம் வகுத்துவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குப் பாராட்டு’ என்று தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.