அரசியல்
அலசல்

மத்திய - மாநில யுத்தம்... வம்பிழுக்கும் ஆளுநர்!

ஆளுநருக்குத் தன்னிச்சையான அதிகாரம் ஏதும் சட்டத்தில் வழங்கப்படவில்லை. சட்டப்பேரவையால் நிறைவேற்றப்படும் மசோதாவுக்கு, அரசியலமைப்புப் பிரிவு 200-ன்கீழ் ஏதாவது ஒரு நடவடிக்கையை அவர் எடுத்தாக வேண்டும்

Published:Updated:
மு.க.ஸ்டாலின், ஆர்.என்.ரவி
பிரீமியம் ஸ்டோரி
மு.க.ஸ்டாலின், ஆர்.என்.ரவி
92Comments
Share

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, தேசிய அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. ஆளுநர் கிடப்பில் போட்டிருந்த பத்து மசோதாக்களுக்கும், அரசியலைப்புச் சட்டப் பிரிவு 142 வழங்கியிருக்கும் சிறப்பு அதிகாரத்தின்கீழ் ஒப்புதல் அளித்த உச்ச நீதிமன்றம், மசோதாக்கள்மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும், ஆளுநர்களுக்கும் புதிய காலக்கெடு விதித்திருக்கிறது. இந்த அதிரடியைத்தான் மத்திய பா.ஜ.க அரசு துளியும் எதிர்பார்க்கவில்லை. நிலைமையைக் கையாள்வது குறித்து மத்திய அமைச்சர் நட்டாவின் வீட்டில் விடிய விடிய ஆலோசனை, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுடன் பிரதமர் மோடி ஆலோசனை, நீதிமன்றங்களுக்கு எதிராக குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரின் ஆக்ரோஷம் என டெல்லியில் பரபரப்பு காட்சிகள் அரங்கேறிவருகின்றன!

ஆனால், தான் கொளுத்திய முதல் நெருப்பே டெல்லியை ஆட்டம் காணச் செய்திருக்கும் புரிதல்கூட இல்லாமல், அடுத்த தீக்குச்சியை உரசுகிறார் ஆளுநர் ரவி. ‘துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்குத்தான் உண்டு’ என்ற சட்டம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரை அழைத்துவரவும் ஆயத்தமாகிறார். “நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது...” என்கிற மனநிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசை வம்பிழுக்கும் விதமான ஆளுநர் ரவியின் செயல்பாடுகள், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான யுத்தத்தை மேலும் உக்கிரமாக்குகிறது!

என்னதான் நடக்கிறது ராஜ் பவனில்... ஆளுநர் ரவியின் மனநிலை என்ன..?