மற்ற எபிசோடுகள்

1 கிலோ காய் 40 ரூபாய்... ஆண்டுக்கு 50,000 டன் தேவை! இந்த மரம்... தமிழ்நாட்டுக்கு வரம்!

மரம் தொடர்

Published:Updated:
டிவி டிவி காய்கள்
பிரீமியம் ஸ்டோரி
டிவி டிவி காய்கள்
0Comments
Share

சவுக்கு, தைலம், வெள்ளைக்கடம்பு, மலைவேம்பு, குமிழ், வேலம், சிசு, பாப்புலஸ் உள்ளிட்ட 8 வகையான மரங்களை உள்ளடக்கிய, காகிதக்கூழ் சார்ந்த பல்பயன் வேளாண் காடு அமைப்பது குறித்தும்... மேட்டுப் பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், சவுக்கு மரத்தில் அறிமுகம் செய்துள்ள வீரிய ரகங்களின் சிறப்புத் தன்மைகள் மற்றும் வருமான வாய்ப்புகள் குறித்தும் கடந்த அத்தியாயங்களில் பார்த்தோம்.

மருத்துவம் மற்றும் தொழில் துறையினருக்குப் பயன்படக்கூடிய டேனின் என்ற வேதிப்பொருளின் தேவைக்காகப் பல்வேறு நாடுகளில் வளர்க்கப்படும் டிவி டிவி (Divi divi)குறித்தும் இந்த மரத்தின் பிற பயன்பாடுகள், சந்தை வாய்ப்புகள் மற்றும் சாகுபடி முறைகள் குறித்தும் இந்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்ப்போம்.

இந்த மரம் குறித்து, தமிழ்நாட்டு மக்கள் பெரும்பாலும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். இன்னும் சொல்லப் போனால் டிவி டிவி என்ற பெயரே இதற்கு முன்பு கேள்விப்பட்டிராத புதிய சொல்லாக இருக்கும்.

இதன் தாவரவியல் பெயர் ‘சீசல்பினியா கொரியாரியா’ (Caesalpinia coriaria) தமிழில் ‘கோணவேல்’ என்று அழைக்கப்படுகிறது.

இம்மரத்தின் தாயகம், தென் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்கா ஆகிய பகுதிகள் ஆகும். அந்தப் பகுதிகளிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு டிவி டிவி மரம் பரவலாக்கம் அடைந்துள்ளது. இந்த மரம், குடை விரித்ததுபோல் தோற்றம் அளிக்கும். அதனால், அழகுக்காகவே வெளிநாடுகளில் இந்த மரங்களை மக்கள் அதிக அளவில் வளர்க்கத் தொடங்கினார்கள். காலப் போக்கில்தான், இம்மரத்தில் அதிக அளவில் டேனின் என்ற வேதிப்பொருள் நிறைந் திருப்பதை அறிந்து, தோல் பதனிடும் தொழிற் சாலைகள் மற்றும் ஆயுர்வேதம், சித்தா, யுனானி உள்ளிட்ட பாரம்பர்ய மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்காக இம்மரங் களை வளர்க்க ஆரம்பித்தார்கள்.