அலசல்
அரசியல்

துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் எஸ்கேப் ஆன ரௌடிகள்! - போலீஸ் ரேடாரில் யார், யார்?

தமிழகத்தில் ஏ.டி.ஜி.பி-யாக டேவிட்சன் தேவாசீர்வாதமும், சென்னைக்கு அருணும், தாம்பரத்துக்கு அபின் தினேஷ் மோடக் ஆகியோர் புதிய கமிஷனர்களாக நியமிக்கப்பட்ட பிறகு ரௌடிகள் வேட்டை தீவிரப்படுத்தப் பட்டிருக்கிறது

Published:Updated:
போலீஸ் ரேடாரில் யார், யார்?
பிரீமியம் ஸ்டோரி
போலீஸ் ரேடாரில் யார், யார்?
19Comments
Share

ரெளடிகளுக்கு இது போதாத காலம் போல. புதுக்கோட்டை, சென்னையில் நடந்த என்கவுன்ட்டர் சம்பவங்களையடுத்து தலைமறைவாக இருக்கும் ஏ ப்ளஸ் ப்ளஸ், ஏ ப்ளஸ், ஏ ரௌடிகள் எஸ்கேப்பாகிவிட்டனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைத் தொடர்ந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதியும் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு குறித்து விமர்சித்தார். இது தேசிய அரசியலிலும் விவாதப் பொருளானது. அதையடுத்து மாநிலத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், முதன்மைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அப்போதைய உள்துறைச் செயலாளர் அமுதா, டி.ஜி.பி சங்கர் ஜிவால், சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம், கமிஷனர்கள் அருண், சங்கர், அமல்ராஜ், உளவுத்துறை ஐ.ஜி செந்தில்வேலன் ஆகியோருடன் ஆலோசனை நடந்தது.